சென்னை அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.!

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

Update: 2023-04-04 02:23 GMT

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"சேப்பாக்கம் மைதானத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் என்ன ஒரு சிறப்பான ஆட்டம். மின்னல் வேகத்தில் நம்ம டோனி அடித்த 2 சிக்சர்கள் பார்க்க செம த்ரில்லாக இருந்தது. இதே முனைப்புடன் விளையாடி சென்னை அணி இந்தாண்டு கோப்பையை கைப்பற்ற விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்