சமூக நலன் மற்றும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது

சமூக நலன் மற்றும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

Update: 2023-10-13 18:56 GMT


சமூக நலன் மற்றும் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்று திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

ரூ.2 கோடி திட்டப்பணிகள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தனி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணியினை திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பங்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1.000 என்கிற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பலவற்றை செயல்படுத்திவருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன்கள், நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

வேளாண் துறை

வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண்மைத்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவமனையில் மட்டும மருத்துவர்கள் பணிபுரிவதோடு மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கு சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.

வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர். மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவ குழுக்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் சிகிச்சை அளிக்கின்றனர்

இவ்வாறு அவர் பேசினார்.

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சி, நால்ரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ரூ.6½ லட்சத்தில் சுகாதார வளாகம் மற்றும் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுகந்தி முரளி, குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திரன், செந்தில்கணேஷ்மாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்