வெள்ளியங்கிரி கோவிலில் மலைப்பாதை அமைப்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில் மலைப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ரூ1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.;

Update:2022-05-22 17:45 IST

கோவை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம், பூண்டி தாலுகா, வெள்ளியங்கிரி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:-

கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் 'வெள்ளியங்கிரி' என்ற பெயர் பெற்றது. இம்மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம், இமயமலையில் உள்ள கைலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது. கைலாய மலையப் போல வெள்ளியங்கிரி மலையிலும் சிவபெருமான் வீற்றிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

மலையின் உச்சிப்பகுதியில் உள்ள ஒரு குகைக்குள் சுயம்பு லிங்கமாக காட்சித் தருகிறார் வெள்ளியங்கிரி ஆண்டவர். இந்த மலையில் மொத்தம் 7 குன்றுகள் உள்ளன. கடுமையான இந்த மலைப்பாதைகளை கடந்து தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இந்தியா முழுவதும் உள்ள சிவனடியார்கள், பக்தர்கள் பல்வேறு கால கட்டங்களில் தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிமாக வருவதால் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மலைப்பாதை அமைக்க வழியுறுத்தி உள்ளார்கள்.

அந்த அறிவிப்பன்படி மலைப்பாதை அமைப்பதற்கு விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்