புயலால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்
ஆற்காடு அருகே புயலால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்.
ஆற்காடு ஒன்றியம் மேலகுப்பம் ஊராட்சியில் மாண்டஸ் புயல் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மேலகுப்பம் ஊராட்சியில் வாழை மரங்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் வடமலை, தோட்டக்கலை துணை இயக்குனர் லதா, வாலாஜா தாசில்தார் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.