வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-24 19:09 GMT

ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 2-வது வார்டில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 7 ஏக்கர் நிலத்திற்கு மேல் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் அமைச்சர் மெய்யநாதன் சார்பில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு பல வகையான மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் மற்றும் விலை உயர்ந்த மரக்கன்றுகள் ஆயிரத்திற்கும் அதிகமாக கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் வளர்ந்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறையால் மரக்கன்றுகள் கருகும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். மேலும் கன்றுகள் பட்டுவிடாமல் தண்ணீர் விடுங்கள் என்று கூறினார். அப்போது, வார்டு கவுன்சிலர் அமுதா ரெங்கசாமி, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக 2 துப்புரவு பணியாளர்களை தினந்தோறும் நியமித்து மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கவும், மருத்துவமனைகளை தூய்மைப்படுத்தவும் கேட்டுக்கொண்டார். அதன் பேரில் உடனடியாக பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் மற்றும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தூய்மை பணியாளர்களை நியமித்து உத்தரவிட்டனர். ஆய்வின்போது ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் கவுன்சிலர், மருத்துவர்கள், செவிலியர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்