விருத்தாசலம்-ஜெயங்கொண்டம்- மதனத்தூர் 4 வழிச்சாலை பணிகளை அமைச்சர் ஆய்வு

விருத்தாசலம்-ஜெயங்கொண்டம்- மதனத்தூர் 4 வழிச்சாலை பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-26 19:13 GMT

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலமாக விருத்தாசலம்- ஜெயங்கொண்டம்- மதனத்தூர் சாலையில் சுமார் 20.80 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச் சாலையாக மேம்படுத்தும் பணி முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் 2 சிறு பாலங்கள் திரும்ப கட்டுதல், 2 சிறு பாலங்கள் அகலப்படுத்துதல், 22 புதிய கல்வெட்டுகள், 7 கல்வெட்டுகளை அகலப்படுத்துதல் மற்றும் ஆண்டிமடம், கல்லாத்தூர், கூவத்தூர் வடக்கு, கூவத்தூர் தெற்கு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சுமார் 10.83 கிலோ மீட்டர் நிலத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகளின் தரம் மற்றும் தன்மை குறித்து ஆய்வு செய்தார். சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சத்திய பிரகாஷ், கோட்ட பொறியாளர்கள் உத்தண்டி, அம்பிகா மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள் கருணாநிதி, செல்வராஜ், ராஜா மற்றும் உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், அகிலா முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்