அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
தொட்டியம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த மாணவர்களிடம் பாடத்திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியர்களிடம், கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி விகிதம், மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார். வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பழனிவேலு, பெற்றோர் -ஆசிரியர் கழக துணைச்செயலாளர் விஜயன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.