கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-21 12:20 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக செயல்பட்டு வரும் 80 கடைகளை தற்காலிகமாக வடசன்னதி ஒத்தவாடை தெருவில் அமைக்க வலியுறுத்தினார்.

தொடர்ந்து ராஜகோபுரம் முன்பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தற்காலிகமாக சாலையோர வியாபாரிகளுக்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அந்த இடத்தை முழுவதுமாக பேவர் பிளாக் அமைத்து எஞ்சியுள்ள இடத்தில் கார் பார்க்கிங் ஏற்படுத்துதல்,

இருபுறமும் தற்காலிக கடைகள் அமைத்து தர இடம் தேர்வு செய்து இப்பணிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அடிப்படை வசதிகள்

மேலும் தென் சன்னதி ஒத்தவாடை தெருவில் செயல்பட்டு வரும் குளியலறை மற்றும் கழிவறைகளை நவீன வசதிகளுடன் கூடிய அடிப்படை வசதிகளை பக்தர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், பக்கதர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

தீயணைப்புத்துறையின் மூலம் அவசர காலத்தில் பயன்படுத்தும் தீயணைப்பு ஊர்தி எளிதில் சென்று வரும் வகையில் நுழைவுப்பகுதியை அகலப்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார்,

உதவி கலெக்டர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் முருகேசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நிர்வாகிகள் துரை வெங்கட், பிரியா விஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம், குட்டி புகழேந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்