ஓசூர், சூளகிரி பகுதிகளில்242 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

Update: 2023-04-27 19:00 GMT

ஓசூர்:

ஓசூர், சூளகிரி பகுதிகளில் 242 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ரேஷன் கடைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்தகோட்டாவில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணி, பாத்தகோட்டா முதல் டி.குருபரபள்ளி வரை ரூ.2 கோடியே 55 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணிகள், தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளியில் ரூ.14 கோடியே 74 லட்சத்தில் தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.22 கோடியே 79 லட்சம் மதிப்பிலான கட்டிடப்பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

மேலும் ஓசூர் மாநகராட்சி காந்தி நகர், கிருஷ்ணா நகர், டைட்டான் டவுன்சிப் மற்றும் ஓ.காரப்பள்ளி, கொத்தகொண்டபள்ளி ஆகிய 5 பகுதிகளில் பகுதி நேர மற்றும் முழுநேர ரேஷன் கடைகள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

நலத்திட்ட உதவிகள்

இந்த நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்ததுடன், ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். மேலும் 55 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 207 பயனாளிகளுக்கு இருளர் இன சாதி சான்றிதழ்கள் என மொத்தம் 242 பயனாளிகளுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், தளி ராமச்சந்திரன், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, துணை மேயர் ஆனந்தய்யா, மாநில தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் அப்துல்ரகுமான்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்