தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர், மேயர் பங்கேற்றனர்.
சுதந்திர போராட்ட தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர், மேயர் பங்கேற்றனர்.
சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை. தியாகிகளின் வீரம் செறிந்த போராட்டத்தால், தியாகத்தால், தன்னலமற்ற சேவையால், சிந்திய ரத்தத்தால் கிடைத்தது. திருப்பூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சுந்தராம்பாள். இவர் 1913-ம் ஆண்டு திருப்பூர் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் பிறந்தார். 1927-ம் ஆண்டு திருப்பூர் பொதுக்கூட்டத்திற்கு வந்த காந்தியடிகளின் கதர் ஆடைகள் அணிய வேண்டிய அவசியத்தின் பேச்சை கேட்டு அன்று முதல் சுந்தராம்பாள் கதர் ஆடை மட்டுமே அணிந்து வந்தார். திருப்பூரில் கதர் உற்பத்தி, விற்பனை, பயிற்சி மையத்துக்காக 22.82 ஏக்கர் நிலத்தை சுந்தராம்பாள் குடும்பத்தினர் சொற்ப விலைக்கு வழங்கினார்கள். தற்போது வரை அந்த இடத்தை தமிழ்நாடு சர்வோதைய சங்கம் நிர்வகித்து வருகிறது. பின்னர் 1941-ம் ஆண்டு தனி சத்தியா கிரகத்தியில் ஈடுபட்டு 3 மாதக் குழந்தையான இளைய மகன் நாச்சிமுத்துவை எடுத்துக்கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டார். அதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு 7 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். இது போன்ற பல சுதந்திர போராட்டங்களில் தியாகி சுந்தராம்பாள் பங்கேற்று கடந்த 20.8.2007-ம் ஆண்டு மறைந்தார். அவருக்கு பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவருடைய சிலைக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன், 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் மற்றும் வாரிசுதாரர்கள் ஸ்ரீதர், சாமிநாதன், ப்ரித்வ் காங்கேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.