மினிலாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
நாங்குநேரி அருகே மினிலாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாங்குநேரி:
நெல்லை அருகே நரசிங்கநல்லூரைச் சேர்ந்தவர் மகாராஜன் மகன் ஜெனின் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவில் நாங்குநேரி அருகே மூன்றடைப்பை அடுத்த தாழைகுளம் பகுதியில் நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதி விட்டு, அருகில் சென்ற மினி லாரியின் மீதும் மோதியது. இதில் மினி லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ஜெனின் மற்றும் மினி லாரி டிரைவரான ராஜாக்கள்மங்கலம் ஆலங்கோட்டையைச் சேர்ந்த டேனியல்குமார் (40), மினி லாரியில் இருந்த மணிகண்டன் (45) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான கோவில்பட்டி ஜோதிநகரைச் சேர்ந்த இளங்கோ (40) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.