விருத்தாசலம் அருகே மரத்தில் மினி லாரி மோதல்; 2 பேர் காயம்

விருத்தாசலம் அருகே மரத்தில் மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனா்.

Update: 2023-05-27 18:45 GMT

விருத்தாசலம்,

திருச்சி மணப்பாறையில் புளி ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வடலூருக்கு புறப்பட்டது. விருத்தாசலம் அருகே வி.சாத்தமங்கலத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையோரத்தில் நின்ற வேப்ப மரத்தின் மீது மோதியது. இதில் மினி லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமானது. இந்த விபத்தில் மினி லாரியை ஒட்டி வந்த மணப்பாறையை சேர்ந்த சந்தோஷ், சரஸ்வதி ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்