சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

சிவகாசியில் நேற்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2022-11-27 19:35 GMT

சிவகாசி, 

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி சிவகாசியில் நேற்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மினிமாரத்தான் போட்டியை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கிய போட்டி 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அய்யநாடார்- ஜானகி அம்மாள் கல்லூரியில் முடிந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவகாசி துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) கலுசிவலிங்கம் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அதிகாரி சீனிவாசன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்