சிங்கம்புணரி அருகே மினி மாரத்தான் போட்டி

சிங்கம்புணரி அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-09-07 19:41 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

மாரத்தான் போட்டி

சிங்கம்புணரி யாதவா பேரவை சார்பில் 23-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிங்கம்புணரி யாதவா மண்டப நுழைவாயிலில் இருந்து தொடங்கி திண்டுக்கல் சாலை சிங்கம்புணரி பஸ் நிலையம் வழியாக என்பீல்டு மேடு வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியை யாதவா பேரவையின் தலைவர் செல்வம், துணைத் தலைவர் சிவக்குமார், செயலாளர் மாதவன், பொருளாளர் அம்பலத்தரசு மற்றும் மனப்பட்டி பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பரிசு

போட்டி நிறைவில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு யாதவா மண்டபத்தில் உறியடித்தல், கயிறு இழுத்தல், பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் யாதவா சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி யாதவா பேரவை மற்றும் யாதவா பேரவை சங்க இளைஞர் அணி செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்