மினி மாரத்தான் போட்டி

சீர்காழி நகராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.;

Update:2023-10-03 00:15 IST

சீர்காழி:

சீர்காழி நகராட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை தாங்கினார். நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதைப்போல் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் மாரத்தான் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் இளைஞர்கள், பள்ளி மாணவ- மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி வளாகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் பரிசுகளை வழங்கினார். இதில் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் உள்ளிட்ட தன்னார்வு தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்