எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அவர்கள் எம்.ஜி.ஆர்-ஐ வாழ்த்தி கோஷங்களை எழுப்பியவாறு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதேபோல் எம்.ஜி.ஆர். கழகத்தினர் சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.