மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2022-10-29 19:00 GMT

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால் நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த இந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவே நீடிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்