மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து அதிகரித்து இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. கடந்த 1-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து நேற்று 3-வது நாளாக வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாகவே நீடித்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையை ஒட்டிஅமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசன தேவைக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.