பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கு நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்

பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கு நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்று வணிகத்துறை செயலாளர் சுனில் பர்த்வால் கூறினார்.

Update: 2022-12-10 19:26 GMT


பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கு நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்று வணிகத்துறை செயலாளர் சுனில் பர்த்வால் கூறினார்.பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கு நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்று வணிகத்துறை செயலாளர் சுனில் பர்த்வால் கூறினார்.

நிரந்தர கட்டமைப்பு

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் வணிகத்துறை செயலாளர் சுனில் பர்த்வால் பேசும்போது, 'திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பல்வேறு இடையூறுகளையும் சமாளித்து வர்த்தகம் செய்து வருகிறார்கள். கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் திருப்பூரில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு நடந்துள்ளது. பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கு தேவையான நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். தொழில் திறனை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் குறுகிய கால வளர்ச்சிக்கு இல்லாமல் நீண்ட காலத்தீர்வுக்கு வழிவகை செய்ய அரசிடம் முறையிட வேண்டும்' என்றார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பேசும்போது, 'ஏற்றுமதியாளர்களுக்கான அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் பனியன் ஏற்றுமதியாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இதனால் ரிசர்வ் வங்கி ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த வசதியை வங்கிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இதன்மூலமாக ஏற்றுமதியாளர்கள் தைரியமாக வெளிநாட்டு ஆர்டர்களை பெற்று தொழில் செய்ய முடியும்' என்றார்.

ஏற்றுமதி வர்த்தகம் சிறக்கும்

வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் சந்தோஷ்குமார் சாரங்கி பேசும்போது, 'ஐரோப்பிய, அரேபிய நாடுகளுடன் பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிற 29-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. உலக பொருளாதார மந்தநிலை காரணமாக அடுத்து வரும் சிலமாதங்களும் நீடிக்கும். ஏற்றுமதி வர்த்தகத்துக்கு தேவையானதை பெற்றுக்கொடுக்க அரசு முயற்சித்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் ஏற்றுமதி வர்த்தகம் சிறக்கும்' என்றார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) இயக்குனர் அஜய் சகாய் பேசும்போது, 'வெளிநாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்யும்போது கப்பல் சரக்கு போக்குவரத்தில் உள்ள கட்டண இடர்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்