திண்டுக்கல்லில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி, திண்டுக்கல்லில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-11-18 17:17 GMT

வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி, திண்டுக்கல்லில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்

அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்கு கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் சென்னை ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். இதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ரஞ்சித்போஸ், வடமதுரை ஒன்றிய செயலாளர் சதீஷ், நிர்வாகி மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ், வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சுரேஷ்குமார், மகாராஜ்குமார், பாண்டீஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பிலும் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வேடசந்தூர்

வ.உ.சி. பேரவை சார்பில் வேடசந்தூரில் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், பேரவை தலைவர் வேல்முருகன், செயலாளர் முருகன், பொருளாளர் பார்வதி முருகேசன், இளைஞரணி நிர்வாகி வில்லியம், பொறுப்பாளர் கவிதா முருகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் மாநில இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், அ.தி.மு.க. நகர செயலாளர் பாபுசேட், பா.ஜ.க. சார்பில் நிர்வாகி பாலாஜி, இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் பிரதீப், விஜயகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வத்தலக்குண்டு

வெள்ளாளர் பெருமக்கள் சங்கம் சார்பில் வத்தலக்குண்டுவில், வ.உ.சிதம்பரனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜெயமாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் இனியவன் காமாட்சி, பொருளாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்