மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி

பெரம்பூர் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-07-26 18:42 GMT

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு..க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் பி.வி. பாரதி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கரன், சேத்தூர் ஊராட்சி மன்றதலைவர் மணிகண்டன், தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் தத்தங்குடி இளங்கோவன் வரவேற்றார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஓ.எஸ் மணியன் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினருக்கு சால்வை அணிவித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்