அ.தி.மு.க சார்பில் சனிக்கிழமை 7 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் சனிக்கிழமை 7 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது என மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-21 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படிஅ.தி.மு.க புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் 7 இடங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் காலை 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் செட்டியார் திருமண மண்டபத்திலும், தூத்துக்குடி மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் காலை 10 மணிக்கு பானுபிருந்தாவன் ஹாலிலும், மத்திய தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் காலை 11 மணிக்கு டூவிபுரம் 5-வது தெரு செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்திலும், கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் மதியம் 12 மணிக்கு லூர்தம்மாள்புரம் ரபேல் ஜோசப்பின் அம்மாள் நூற்றாண்டு மண்டபத்திலும், வடக்கு பகுதி கழகம் சார்பில் மதியம் 1 மணிக்கு பொன்சுப்பையா நகர், லீலா பொன்சுப்பையா மஹாலிலும், தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் மாலை 4 மணிக்கு தங்கம்மாள் புரம் காமராஜர் அரங்கத்திலும், மத்திய வடக்கு பகுதி கழகத்தின் சார்பில் மாலை 5 மணிக்கு தூத்துக்குடி 2-ம் கேட் வரதராஜபுரம் லாரி உரிமையாளர் சங்கக் கூட்ட அரங்கிலும் என 7 இடங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

இந்த கூட்டங்களில் நான் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறேன். இதில் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்களாக புதிதாக இணைத்து கொள்பவர்களும் புதுப்பித்துக் கொள்பவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், தொகுதி பணிக்குழு கண்காணிப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்