மெகா தூய்மை பணி

திருச்சியில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.;

Update:2022-09-10 18:56 IST

திருச்சி மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் மெகா சிறப்பு தூய்மை பணி நேற்று காலை நடந்தது. இதில் உதவி ஆணையர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் வினோத்கண்ணா, கோட்டத்தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு அப்பகுதியில், தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றினர். சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை அகற்றி சுத்தப்படுத்தினர். முன்னதாக தூய்மை பணியில் ஈடுபட்டவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்