கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம்
கே.வி.குப்பத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் தாலுக்கா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் அ.கீதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பதிவேடுகள், நலத்திட்ட பணிகள் பராமரிப்பு, நிலுவையில் உள்ள பணிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்று வரும் பணிகளை, விரைந்து முடிக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது.