மின்சார வாரிய என்ஜினீயர்கள் கூட்டம்

பாளையங்கோட்டையில் மின்சார வாரிய என்ஜினீயர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2022-06-14 21:43 GMT

நெல்லை:

தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர் யூனியன் சார்பில் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் முன்பு நேற்று மாலையில் வாயிற்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மின்சார வாரியம் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய சம்பள உயர்வு, சலுகைகள் உள்ளிட்டவை குறித்து முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும். இந்த ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இன்று (புதன்கிழமை) மதுரையிலும், நாளை (வியாழக்கிழமை) கோவையிலும் வாயிற்கூட்டம் நடத்துகிறோம். வருகிற 21-ந்தேதி முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி சென்னையில் பேரணி நடத்த உள்ளோம் என்றார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் ராமன், அமைப்புச்செயலாளர் அலியார், இணைச்செயலாளர்கள் ஸ்டீபன், நாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்