தியாகதுருகத்தில்அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்செந்தில்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தியாகதுருகத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-14 18:45 GMT


தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே நாகலூரில் தியாகதுருகம் மேற்கு, கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பிரபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி இணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சாமிதுரை வரவேற்றார். கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகள் மேற்கொள்வது, திண்ணை பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். இதில் மாவட்ட மீனவரணி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பாண்டுரங்கன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய பொருளாளர் கதிர்வேல், ஒன்றிய துணைச் செயலாளர் சுமதி சாமிதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் பழனிசாமி, மணிவண்ணன், புஷ்பவள்ளி வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு ஒன்றிய பொருளாளர் அழகுவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்