பெரிய கொழப்பலூரில் அ.தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம்

பெரிய கொழப்பலூரில் அ.தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது;

Update:2022-12-07 22:14 IST

பெரிய கொழப்பலூரில் அ.தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது

பெரணமல்லூர் சமுதாய கூடத்தில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயல்வீரர் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மேலானூர்.வீரபத்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், பெரணமல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், அவைத்தலைவர் முருகேசன், நாராயணமங்கலம், ஊராட்சி மன்ற தலைவர் மோகன், பெரிய கொழப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.பேசுகையில், ''தேர்தல் நேரத்தில் தி.மு.க.பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றியது. இதையெல்லாம் கண்டித்து வருகிற 14-சந் தேதி (புதன்கிழமை) பெரணமல்லூரில், உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மேற்கு, கிழக்கு, ஒன்றிய அ.தி.மு.க.சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பொறுப்பாளர்களும், 57 ஊராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க.வினர் தவறாது கலந்து கொள்ள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக மேற்கு ஒன்றிய பொருளாளர்நெடுங்குணம் ஆறுமுகம், வரவேற்றார். இதில் மாவட்ட பிரதிநிதி முரளி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சுந்தர், கிளை கழக செயலாளர்கள் ராஜி, வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, சிறுபான்மை பிரிவு காதர் ஷெரீப், மாணவரணி விஸ்வநாதன், இளைஞர் அணி சுரேஷ், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீனிவாசன், முன்னாள் விவசாய விவசாய அணி துணைச் செயலாளர் தேவராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ஏழுமலை, பழனி, மற்றும் ஒன்றியத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட கலந்து கொண்டனர்,

Tags:    

மேலும் செய்திகள்