காரிமங்கலம்:
காரிமங்கலம் பேரூராட்சி கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழிவுநீர் கால்வாய், குடிநீர், பைப்லைன் அமைத்தல், மினி டேங்க் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பஸ் நிலையத்தில் விரிவாக்க பணி, சந்தை மேம்படுத்தும் பணி ஆகியவற்றிற்காக ரூ.3 கோடி நிதிஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் வெங்கடலட்சுமி, கலா ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.