கிருஷ்ணகிரியில், 5-ந் தேதி தொடங்க உள்ள மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது

Update: 2023-06-30 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ள மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 5-ந் தேதி 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை

கூட்டத்தில் மாங்கனி கண்காட்சி விழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரங்குள் அமைப்பது குறித்து. அப்போது அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கலெக்டர்கூறினார்.

மேலும் செய்திகள்