ஓசூர்
ஓசூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், தெருமுனை கூட்டம் பாகலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஓசூர் வடக்கு ஒன்றிய தலைவர் அப்பையா நாயுடு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் கலந்துகொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், நாகராஜ், சீனிவாச ரெட்டி, பார்த்திபன், ஸ்வேதா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.