மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்150 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Update: 2023-05-24 06:15 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 419 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் 150 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் தமிழரசன், மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹி முகமது நசீர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்