தீப்பெட்டி தயாரிப்புதொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க கருத்து கேட்பு கூட்டம்தர்மபுரியில் நடைபெற்றது

Update: 2023-05-09 19:00 GMT

தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் தர்மபுரி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிட வளாக அலுவலகத்தில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் முன்னிலையில் நடைபெற்றது. சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் முத்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் ஜெய்சங்கர், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் ஆகியோர் கருத்து கேட்பு கூட்டத்தை முன்னின்று நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப் பொருட்கள் விலை ஏற்றம், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்