பேடரஅள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Update: 2023-01-27 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

நல்லம்பள்ளி ஒன்றியம் பேடரஅள்ளி ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சுரேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கணேசன் வரவு, செலவு மற்றும் திட்ட அறிக்கை வாசித்தார். பற்றாளர் கலைச்செல்வி, ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் கோகிலா, ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வறுமை ஒழிப்பு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சத்யா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆண்டி, கிராம நிர்வாக அலுவலர் கணேசன், வார்டு உறுப்பினர்கள் முனியம்மாள், ஜெயந்தி, வேலு, செல்வம், சுகாதார பணியாளர்கள் தீபா, பாரதி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்.

மேலும் செய்திகள்