குமாரபாளையம் நகராட்சி பகுதிசபை கூட்டம்

Update:2022-11-05 00:15 IST

பள்ளிபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பகுதிசபை கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் 1, 4, 10, 12, 13, 25, 26, 33 ஆகிய வார்டு பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் வசதி, தெருநாய்கள் தொல்லை, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் ரத்த சோகை சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என நகராட்சி தலைவர் கூறினார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காமராஜ், மகளிரணி செயலாளர் சித்ரா, நிர்வாகிகள் உஷா, விமலா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வைத்தனர். இதில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் ரேவதி, புஷ்பா, மகேஸ்வரி, அழகேசன், நாகநந்தினி, வெங்கடேசன், தர்மராஜன், ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்