ஊராட்சி தலைவர்கள் கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டம் நடந்தது.

Update: 2022-09-23 18:45 GMT

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் தலைமை தாங்கினார். ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதசுந்தரம், ரத்தினவேல், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி தலைவர் மணிகண்டன், காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர்மணி முத்து உள்பட 43 கிராம ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு முடிய ஊராட்சிகளில் நடைபெற்ற பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். மேலும் நிறைவேறாத பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இது தவிர அரசின் அறிவிப்பின் படி எந்தெந்த ஊராட்சிகளில் எந்த பணிகளை செய்யலாம் என்றும் தெரிவித்தார். அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்