மீளவிட்டான் கண்மாய் கரையில்அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

மீளவிட்டான் கண்மாய் கரையில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது. அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-08-18 18:45 GMT

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் சி.வ.கண்மாயை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை பணிகள் முடிவடையாத நிலையில் அந்த பகுதி பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உடல் கண்மாய் கரையில் நடைபாதையில் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்