கார் கவிழ்ந்து மருத்துவ மாணவி பலி; 5 பேர் காயம்
சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்ததில் மருத்துவ மாணவி பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்ததில் மருத்துவ மாணவி பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
சுற்றுலா சென்றனர்
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள மதுவாடா கிராமத்தை சேர்ந்த நிஷாத் அகமத் (வயது 21), ஆந்திர மாநிலம் திருப்பதி ராமச்சந்திர நகரை சேர்ந்த சத்ய நாராயணன் மகள் சண்முகி (22), அந்தமான் போர்ட் பிளேரை சேர்ந்த கலைமான் மகள் அலினா (18), ஷாகீர் மகள் சாஜான் (18), ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த மகுண்டாலே அவுட்டை சேர்ந்த ரித்தின் (20), கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பிரசாந்த் மகன் சுப்ரீத் (19) ஆகியோர் படித்து வருகிறார்கள்.
இவர்கள் 6 பேரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா புறப்பட்டனர். காரை நிஷாத் அகமத் ஓட்டினார். அதிகாலை சுமார் 5 மணி அளவில் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மாணவி பலி
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் மாணவி சண்முகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
அவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் தாலுகா போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.