மக்களைத் தேடி மருத்துவ திட்டம்
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் நடைபெற்று வரும் சுகாதார பணிகளை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டி.ஆர்.செந்தில் திடீரென ஆய்வு செய்தார்.
பின்னர் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சுகாதார மையத்தின் மூலம் வழங்கப்பட்ட மருந்து பெட்டகத்தில் உள்ள மாத்திரைகளையும், பராமரிக்கும் பதிவேடுகளையும் பார்வையிட்டார். பின்னர் பொது மக்களிடம் மக்களைத் தேடி மருத்துவ குழுவினர் வருகிறார்களா? என்று கேட்டறிந்தார்.
ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.