மருத்துவத்துறையில் இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது

மருத்துவத்துறையில் இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று, சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி கூறினார்.

Update: 2023-06-10 19:45 GMT

தஞ்சாவூர்;

மருத்துவத்துறையில் இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்று, சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி கூறினார்.

பட்டமளிப்பு விழா

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார். விழாவில் சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி கலந்துகொண்டு, 148 மருத்துவ இளங்கலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-பட்டமளிப்பு என்பது பட்டம் பெறும் அனைவரின் வாழ்விலும், ஒரு முக்கியமான விழாவாகும். மருத்துவக்கல்லூரியில் நுழைந்த முதல் நாள் முதல் படிப்பை முடித்து வெளியே செல்லும் போது மருத்துவம் குறித்த அறிவு நிறைய பெற்று இருப்பீர்கள். படிப்பு மட்டுமே மருத்துவத்துறையில் முடிவு கிடையாது. கற்றுக்கொண்டே இருப்பது தான் நிறைவானது. 2017-ம் ஆண்டு முதல் மருத்துவம் படித்த மாணவர்கள், கொரோனா வைரஸ் மூலம் பல்வேறு பாடங்களை கற்று இருப்பார்கள்.

உலக நாடுகள் பாராட்டியது

கொரோனாவை இந்தியா சிறப்பாக கையாண்டதாக உலக நாடுகள் பாராட்டியது. டாக்டர்கள் நோயாளிகளிடம் புன்கையுடன் செயல்பட்டால், அவர்களுக்கான பாதி நோய் தீர்ந்து விடும். நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்படுத்தும். டாக்டர்கள் இதயம் மற்றும் ஆன்மாவை கொண்டு சிகிச்சையை அளிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மருத்துவபடிப்புகள் வளர்ந்துள்ளது. இந்தியாவில் மருத்துவம் பல்வேறு நல்ல நெறிமுறைகளை கொண்டவை. தேசிய மருத்துவ கவுன்சில் மருத்துவக்கல்லுாரிகளை தொடங்குவது என்ற தீவிரமாக ஆராய்ந்து அனுமதிஅளிப்பது தான் காரணம்.

சிறந்த மருத்துவக்கல்லூரிகள்

மருத்துவத்துறையில் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் தான் சிறந்த மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. 37 அரசு மருத்துவக்கல்லூரி, 20 தனியார் கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டாக்டர்களை உருவாக்கி வருகிறது. உலக சுகாரதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் போதும் என்ற விகிதத்தில் இருந்தால் போதும் என்றுகூறும் நிலையில், தமிழகத்தில் 834 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற விகிதத்தில் டாக்டர்கள் உள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிக பழமையானது. இங்கு சிறந்த மருத்துவக்கல்லூரியும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

கலை நிகழ்ச்சிகள்

விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்