கூடலூரில், போக்குவரத்து ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
கூடலூரில், போக்குவரத்து ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர் கிளை ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் கூடலூர் பணிமனையில் நடைபெற்றது. போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் நடராசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மேலாளர் அருள் கண்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் டாக்டர்கள் கிறிஸ்டினா, தீபக் குமார் ஆகியோர் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் மனோஜ், தொழிற்சங்க மண்டல செயலாளர் நெடுஞ்செழியன், போக்குவரத்து கழக ஊழியர்கள் உதயசூரியன், ரகுபதி, விஜயகுமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.