மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

Update: 2023-02-16 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார், வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல் பணி நடந்தது. தொடர்ந்து புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. உதவித்தொகைக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மாணவர்களுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகாமில் 400 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்