பெரணமல்லூரில் மருத்துவ முகாம்

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-08 16:42 GMT

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு பெரணமல்லூர் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் ராமசாமி, பெரணமல்லூர் ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார டாக்டர் அருண்குமரர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அம்பேத்குமார் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர். பின்னர் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

முகாமில் டாக்டர்கள் மகாலட்சுமி, திவ்யபிரியா, சிவரஞ்சனி மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் புஷ்பநாதன், சுகாதார ஆய்வாளர் ்கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்