கரூர் ஆண்டாங்கோவில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து கோவிந்தம் பாளையம் கிராமத்தில் அமராவதி பாசன பிரிவு ராஜ வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர் வினோத், ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.