இலவச மருத்துவ முகாம்-தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மானாமதுரை அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமை தமிழரசி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-28 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். இந்த முகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதில் யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்