மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை

குளச்சலில் மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை;

Update:2022-08-23 01:21 IST

குளச்சல், 

குளச்சல் கீழத்தெருவை சேர்ந்தவர் கலீல் ரகுமான் (வயது58), மெக்கானிக். இவர் டி.வி. போன்ற மின்சாதன பொருட்கள் பழுதுநீக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவியும், மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதையடுத்து தனது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில், கலீல் ரகுமான் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்றுமுன்தினம் மகளும், மருமகனும் வெளியே சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கலீல் ரகுமான் சமையல் அறையில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குளச்சல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்ெகாலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்