மெக்கானிக் தற்கொலை

வேடசந்தூர் அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-04-26 20:26 IST

வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (வயது 36). இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக். இவர், சீத்தமரம் நால்ரோட்டில் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். நேற்று காலை இவர், நடுப்பட்டியை அடுத்த வெள்ளிமலையில் கிரிவலம் செல்லும் பாதை அருகே உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்மணி, பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் வீராசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரசாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த வீராசாமிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்