மெக்கானிக் தற்கொலை

மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டாா்;

Update:2022-06-24 03:26 IST

பெருந்துறை

பெருந்துறை பகுதியை சேர்ந்த 26 வயது உடைய மெக்கானிக் ஒருவருக்கு தங்கை உள்ளார். இந்த நிலையில் அந்த பெண், அதே பகுதியை சேர்ந்த அண்ணன் முறை கொண்ட வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணை நீலகிரியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் காதலித்த அண்ணன் முறை கொண்ட வாலிபரின் வீட்டுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்தார். இதனால் மெக்கானிக் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள விட்டத்தில் அவர் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மெக்கானிக் இறந்தார்.

இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்