மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி - இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்தபோது பரிதாபம்

சிந்தாதிரிப்பேட்டையில் இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியானார்.

Update: 2023-08-30 01:41 GMT

சென்னை,

பெரம்பூர் பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35). இவருக்கு இந்திரா (34) என்ற மனையியும், 6 வயதில் மகனும் உள்ளனர். ரஞ்சித் குமார் சிந்தாதிரிப்பேட்டை ஐயா பிள்ளை தெருவில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் கடந்த 5 வருடங்களாக மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல ரஞ்சித் குமார் காலை வேலைக்கு சென்றார். பின்னர், காலை 11 மணியளவில் தண்ணீர் குழாய் மூலம் இருசக்கர வாகனம் ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து ரஞ்சித்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ரஞ்சித் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்