திருமண நாளில் தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை

திண்டிவனம் அருகே திருமண நாளில் தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை

Update: 2023-07-10 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள குருவம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 35). டிராக்டர் மெக்கானிக். இவருடைய மனைவி ரேகா. இவர்களுக்கு நவியா(12), என்ற மகளும், பவித்ரன்(10) என்ற மகனும் உள்ளனர். முருகன் தற்போது திண்டிவனம் நல்லிய கோடன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருமண நாள் என்பதால் முருகன் குடும்பத்தோடு முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார். மாலையில் கடைக்கு சென்று காய்கறி வாங்கி வந்த அவர் வீ்ட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமண நாளில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்