பருவமழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

பருவமழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

Update: 2022-11-02 03:33 GMT

சென்னை,

பருவமழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ;

2,700 பில்லர் பாக்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. சீரான, தடையில்லா மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பகலில் 1,440 பேர், இரவில் 600 பேர் தொடர் பணி செய்து வருகின்றனர் .

40 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்ட்டுள்ளன .கையிருப்பில் 2 லட்சம் மின் கம்பங்கள் உள்ளன . கையிருப்பில் 18 ஆயிரம் மின் மாற்றிகள் உள்ளன .

தமிழகம் முழுவதும் 13 லட்சம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாது சீரான மின் வினியோகம் வழங்கப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்